இன்னும் ஒரே ஒரு ரன்.! எடுப்பாரா தோணி? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.!

Share:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்து வருகிறது. 4 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில், இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.


இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட்கீப்பெருமான எம்.எஸ்.டோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் சேர்த்துள்ளார். இதில், அவர் ஆசிய அணிக்காக எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது வரை 9,999 ரன்கள் சேர்த்துள்ளார்.

இன்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். டோனி இந்த மைல் கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.