இளைஞர்களே தயாராகுங்கள்...! ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் ...! விபரங்கள் ....!

Share:
திருச்சியில் உள்ள 117-வது பிரதேச ராணுவ படையில், ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு முகாமில், 57 சிப்பாய்கள் (பொதுப் பணி) 1 சலவை தொழிலாளி, 1 சிப்பாய் எழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம், திருச்சி மன்னார்புரம் ராணுவ பயிற்சி மையத்தில் வரும், நவம்பர் 12-ஆம் தேதி துவங்குகிறது.
சிப்பாய் பணிக்கு, 45 சதவீத மதிப்பெண்களுடன் மெட்ரிக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், என்பது தகுதியாகும்.

சலவை தொழிலாளர் பணிக்கு, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

சிப்பாய் எழுத்தர் பணிக்கு, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன், கம்ப்யூட்டர் மற்றும் தட்டச்சு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.இந்த ஆட்கள் தேர்வு முகாம், நவம்பர் 12-ஆம் தேதி அன்று துவங்கி, 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான வயது வரம்பு 18 முதல் 42 வரை…!

பிரதேச ராணுவ படையில் சேர விரும்புவோர், நவம்பர் 12-ஆம் தேதி, அதிகாலை 5 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும், என்று லெப்டினன்ட் கர்னல் நவீன்பவார் தெரிவித்துள்ளார்.