வாட்ஸ்அப்பில் உங்களது போட்டோவை ஸ்டிக்கர்களாக அனுப்புவது எப்படி!

Share:
வாட்ஸ்அப்பில் உங்களது போட்டோவை ஸ்டிக்கர்களாக அனுப்புவது எப்படி!

இன்றைய சூழலில் குறுஞ்செய்திகளை அனுப்புவதில் முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான். அதிலும் ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவரும் கண்டிப்பாக வாட்ஸ் அப்பை பயன்படுகிறார்கள். 

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைச் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது செய்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டிக்கர் அனுப்பும் வசதியை தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் ஏற்படுத்தி தந்தது. 


சேட்டிங்கில் ஸ்டிக்கர் அனுப்பும் வசதி Hike செயலியில் தான் முதலில் வந்தது. இந்த வசதியானது வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இதையடுத்து தற்போது வாட்சப்பிலும் ஸ்டிக்கர் அனுப்பும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அண்மையில் வாட்சப் வழங்கியிருந்தது. ஏற்கனவே புகைப்படங்களுடன், ஜிஃப், எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஸ்டிக்கர் வசதி சேர்க்கப்பட்டது. 


இந்நிலையில், வாட்ஸ்அப்பில் உங்களது போட்டோவை எப்படி ஸ்டிக்கர்களாக அனுப்புவது பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு சில ஸ்டிக்கர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் பிளேவில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு ஸ்டிக்கர்களையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது புகைப்படங்களையும் ஸ்டிக்கர்களாக பயன்படுத்த முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம். 

முதலில் நீங்ககள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப் 2.18 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன் கொண்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து, அதற்கேற்ப வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.

முதலில் நீங்கள் எந்த புகைப்படத்தை ஸ்டிக்கர் ஆக மாற்ற வேண்டுமோ, அதை தேர்வு செய்து PNG ஃபார்மேட்டிற்கு மாற்ற வேண்டும். 

நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் பின்னணியில் எதுவும் இருக்கக் கூடாது. ( Background Eraser செயலியை பயன்படுத்தி புகைப்படத்தின் பின்னணியை ரிமூவ் செய்யலாம்) 

நீங்கள் ஸ்டிக்கராக மாற்ற 3 புகைப்படத்தை எடுத்து கொள்ளவும்.இனி பிளேஸ்டோர் சென்று "Personal Stickers for WhatsApp " செயலியை பதிவிறக்கம் செய்து செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். பின் இதில் உள்ள ‘Add’ பட்டனை கிளிக் செய்து மீண்டும் ‘Add’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 
ஸ்டிக்கர் தானாக add ஆகிவிடும். இனி நீங்கள் உருவாக்கிய போட்டோ ஸ்டிக்கரை கிளிக் செய்து வாட்சப் சாட்டில் அனுப்பலாம்.