தமிழக அரசின் இலவச கேபிள் டிவி செட்டாபாக்ஸ் இணைப்பு பெறுவது எப்படி? TACTV free set off box

Share:
அரசு கேபிள் டி.வி இலவச செட்டாப்பாக்ஸ் பெறுவது எப்படி?

தமிழக அரசின் இலவச கேபிள் டிவி செட்டாபாக்ஸ் இணைப்பு பெறுவது எப்படி?

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது புகார் செய்வது எப்படி?


TACTV. என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது அரசு செட்டாப் பாக்ஸ் ஆகும்.


ஒரு செட்டாப் பாக்ஸ் விலை ₹1800 ரூபாய் என மும்பை தனியார் நிறுவனத்தில் தமிழக அரசு கொள் முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த செட்டா பாக்ஸை கேபிள் டி.வி சந்தாதாரர்களுக்கு அரசு இலவசமாக வழங்குகிறது.


கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களிடம் இணைப்பு வழங்குவதற்கு பிட்டிங் (Insulation fees ) கட்டணமாக ₹200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு அறிவித்துள்ளது .


கேபிள் டி.வி ஆப்பரேட்டர்கள் ஒரு செட்டாபாக்ஸ்க்கு அரசுக்கு ₹180 ரூபாய் வைப்புத்தொகை கட்டணம் செலுத்தி செட்டாபாக்ஸினை பெற்று வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்க வேண்டும் .

கட்டணம் :

மாத சந்தா கட்டணம் இருவகையாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.


1. 200 சேனல்களுக்கு ₹125 ரூபாயும், 

2. 300 சேனல்களுக்கு ₹175 ரூபாயும் GST 18% சேர்த்து மாத சந்தா கட்டணம் செலுத்த வேண்டும்.

இதில் ₹125 ரூபாயில் ₹ 62.50. காசு அரசுக்கும்,₹ 62.50 கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் 

₹175 ரூபாயில் ₹75 ரூபாய் அரசுக்கும், ₹100 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் சேரும்.

அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு பெற முகவரி ஆதாரமாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டணம் செலுத்திய ரசீது, குடும்ப அட்டை நகல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் ஆப்பரேட்டரிடம் கொடுத்தால் போதும் .

புகார் ;


கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்ட துணை மேலாளர்களுக்கு (தாசில்தார்கள்) அரசு வழங்கி உள்ள மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளுங்கள்.


மாவட்டம் மொபைல் எண்கள் 

1. அரியலூர் :94980 02568


2. சென்னை :94980 17185 


3.சென்னை : 94890 17285


4.கோவை : 94980 02569 


5.கடலூர் :94989 02570 


6.தர்மபுரி : 94980 02571 


7.திண்டுக்கல் :94980 02572 


8.ஈரோடு : 94980 02573 


9.காஞ்சீபுரம் : 94980 02574 


10. கன்னியாகுமரி :94980 02575


11.கரூர் : 94980 02576 


12.கிருஷ்ணகிரி :94980 02577 


13.மதுரை : 94980 02578 


14.நாகப்பட்டினம் :94980 02579 


15.நாமக்கல் : 94980 02580 


16.பெரம்பலூர் : 94980 02581 


17.புதுக்கோட்டை : 94980 02582 


18.இராமநாதபுரம் : 94980 02583 


19. சேலம் :94980 02584 


20.சிவகங்கை : 94980 02585 


21.தஞ்சாவூர் : 94980 02586


22.ஊட்டி :94980 02587 


23.தேனி : 94980 02588 




24.தூத்துக்குடி : 94980 02589 


25.திருச்சி :94980 02590 


26.திருநெல்வேலி : 94980 02591 


27.திருப்பூர் ;94980 02592 


28.திருவள்ளூர் : 94980 02593 


29.திருவண்ணாமலை :94980 02594


30.திருவாரூர் : 94980 02595 


31. வேலூர் : 94980 02596 



32.விழுப்புரம் : 94980 02597 


33.விருதுநகர் : 94980 02598


அரசு கேபிள் டி வி செட்டாபாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் குறித்து புகார் தெரிவித்துள்ள தெரிவிக்க நினைக்கும் பாதிக்கப்பட்ட நண்பர்களே*!


சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு கேபிள் டி.வி. புகார்

வாட்ஸ் ஆப் குரூப்பில் உங்களது புகாரினை பதிவு செய்ய வேண்டுகிறோம்



அரசு கேபிள் டி.வி மாவட்ட மேலாளர்கள் என்றழைக்கப்படும் சென்னை, ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், இராமநாதபுரம், ஊட்டி, திருவண்ணாமலை, திருப்பூர் (சொந்த மொபைல் எண்) ஒரு சில மாவட்ட தாசில்தார்களுக்கு அரசு வழங்கி உள்ள வாட்ஸ் ஆப் எண்களை இந்த குரூப்பில் இணைத்துள்ளோம்


உங்களது புகாரினை பதிவு செய்து நிவாரணம் பெற்று பயனடையுங்கள்


கேபிள் ஆப்பரேட்டர்கள் வழங்கும் தனியார் செட்டா பாக்ஸினை தவிர்த்து அரசு வழங்கும் இலவச செட்டாபாக்ஸ்க்கு ₹ 200 மட்டும் கட்டணம் செலுத்தி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதினை தடுத்திட உதவுங்கள்


பெரும்பாலான மாவட்ட மேலாளர்கள் தொடர்பு எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் தொடர்பினை ஏற்க வில்லை என்றும் பல புகார்கள் வரப்பெற்றுள்ளது


கடமை தவறிய பல மாவட்ட மேலாளர்கள் கேபிள் டி.வி ஆப்பரேட்டர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாக ஆதாரத்துடன் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது

எனவே பாதிக்கப்பட்ட அந்தந்த மாவட்ட பகுதி மக்கள் கீழ் காணும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்


கட்டணம் இல்லா தொலைபேசி எண்: 1800 425 9211 


044 28432911 

FAX NO : 044 28432913 

E -mail :tactv@tactv.in 

For internet Enquiries : tactnet@tactv.in

தலைமை அலுவலக முகவரி ;

Tamil Nadu Arasu Cable TV Corporation 

Dugar Towers

34 (123)6th Floor 

Marshalls Road 

Egmore, CHENNAI -600 008



24 மணி நேரமும் செயல் படும் அம்மா அழைப்பு மையம் 1100. புகார் தெரிவிக்கலாம்