அதிரடியாக முடக்கப்பட்ட 827 ஆபாச இணையதளங்கள்; என்ன காரணம் தெரியுமா!

Share:

இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் மிகப்பெரிய சந்தையாக இயங்கி வருகின்றன. இதில் இந்தியர்களை குறிவைத்து, ஏராளமான இணையதளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

இதற்கிடையில் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுதல், ஆபாச இணையதள முடக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து 2,000க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன. 


இந்த சூழலில் அனைத்துவிதமான ஆபாச இணையதளங்களையும் முடக்க வலியுறுத்தி, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பாலியல் ரீதியான பிரச்சனைகள் எழுவதைக் கருத்தில் கொண்டு 857 ஆபாச இணையதளங்களை முடக்க, கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டனர். 

இதற்கான நடவடிக்கைகளில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இறங்கியது. அதன்படி 827 இணையதளங்கள் முடக்க, இணையச் சேவையை வழங்கும் தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.