வரும் ஜனவரியில் இந்தியாவில் 5G சேவை! பிரபல மொபைல் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Share:
கடந்த சில நாட்களுக்கு முன் ஜியோ நிறுவனம் விரைவில் 5g சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக முதன் முதலாக வெளியிட்டது இதை அடுத்து BSNL நிறுவனமும், நாங்களும் 5G சேவையை வழங்க உள்ளோம் என அறிவித்தது. 


இந்நிலையில், இந்தியாவில் 5ஜி சோதனையை 2019 முதல் காலாண்டில் மேற்கொள்ளவுள்ளதாக சாம்சங் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது தொலைத் தொடர்பு துறையுடன் மிகவும் நெருக்கமான முறையில் இணைந்து சாம்சங் செயலாற்றி வருகிறது. அந்த வகையில், வரும் 2019-இல் ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் மிகப்பெரிய அளவில் 5ஜி சோதனையை மேற்கொள்ள சாம்சங் திட்டமிட்டுள்ளது. இந்த சோதனையானது புது தில்லியில் மேற்கொள்ளப்படும். பல்வேறு படி நிலைகளில் இந்த சோதனை நடத்திப் பார்க்கப்பட உள்ளது. எனவே, இதற்கு நீண்ட காலம் பிடிக்க வாய்ப்புள்ளது. அதற்கான பணிகளில் சாம்சங் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் பயனடைவதை தவிர, சுகாதார பராமரிப்பு, வேளாண் துறை, சிறிய நகரங்கள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் மிக அதிக அளவில் பயன் தரக்கூடியது என சாம்சங் நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.#india5glaunchdate