கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி? கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?

Share:
தனது சமூக வலைத்தள சேவையான கூகுள் பிளஸின் பயனர்களாக இருந்த ஏறக்குறைய 5 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக, சமீபத்தில் கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது. இதற்கு பாதுகாப்பு குறைப்பாடு காரணம் என்று கூறப்பட்டு இருந்தது. அதே நேரத்தில், பயனர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் அணுகலுக்கு அனுமதிக்க முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

கடந்த மார்ச் மாதத்திலேயே தனது பாதுகாப்பு குறைப்பாட்டை இந்நிறுவனம் கண்டறிந்த போதும், அதை அந்நிறுவனம் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வாக அமையும் வகையில், தனது சமூக வலைத்தள சேவையான கூகுள் பிளஸை முழுவதுமாக நிறுத்த இந்த தேடல் ஜாம்பவான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 
கூகுள் பிளஸ் கணக்கை டெலிட் பண்ணுவது எப்படி?
ஆனால் அது விரைவில் நடைபெற போவது இல்லை. இந்நிலையில் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு மற்றும் தனிமைப்படுத்துவது குறித்த அச்சம் ஏற்படும் பட்சத்தில், உங்கள் கூகுள் பிளஸ் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்துவிட நினைக்கலாம். இதற்கு உதவும் வழிமுறைகளை கீழே காணலாம். இந்த பணியை தொடங்கும் முன், உங்களுக்கு ஒரு கூகுள் பிளஸ் கணக்கு இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். அதற்கு ஜிமெயில் கணக்கை திறந்து, உங்கள் ப்ரோபைல் படத்தின் மேல் வலது முனையில் கிளிக் செய்யவும். உங்கள் ஜிமெயில் கணக்கு கூகுள் பிளஸ் கணக்கு உடன் இணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், உடனே உங்கள் கூகுள் பிளஸ் கணக்கின் ப்ரோபைலை அது காட்டும்.


 வழிமுறைகள்:

1. ஜிமெயிலை திறந்து, உங்கள் விவரங்களை பதிவிட்டு லாக்இன் செய்யவும். 2. ஸ்கிரீனின் மேற்பகுதி வலது முனையில் உள்ள உங்கள் ப்ரோபைல் படத்தின் மீது கிளிக் செய்யவும். 
3. அது உங்கள் கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும். 
4. இப்போது, இடது பக்கத்தில் உள்ள அமைப்புகள் என்பதன் மீது கிளிக் செய்யவும்.
5. கீழே உருட்டி சென்று, கணக்குகள் பிரிவின் கீழ் வரும் 'டெலிட் யூவர் கூகுள்+ ப்ரோபைல்' என்ற தேர்வை காணவும்.
 6. உங்கள் கணக்கை சரிபார்க்க, பாஸ்வேர்டை அளிக்கவும். 
7. அடுத்த பக்கத்தில், கீழ் நோக்கி உருட்டி 'மற்ற கூகுள் தயாரிப்புகளின் மூலம் நான் யாரையாவது பாலோ செய்தால், அதை அன்பாலோ செய்யவும்' என்பதை தேர்வு செய்யவும். இதன் பிறகு 'ஆம், கூகுள் பிளஸ் ப்ரோபைலை (உங்கள் பெயரில்) (email@gmail.com) என்பதை டெலிட் செய்ய போகிறேன் என்பதை புரிந்து கொணடேன். மேலும் இந்த செயலை திரும்ப பெறவோ, நான் அழித்த தகவல்களை மீட்கவோ முடியாது என்பதை அறிந்து இருக்கிறேன் என்பதை தேர்வு செய்யவும். 

8. இப்போது, 'டெலிட்' பொத்தான் மீது கிளிக் செய்யவும். 
9. இதன் முடிவில், செயல் நடந்து முடிந்ததற்கான உறுதி அளிப்பு திரை மற்றும் சர்வே காட்டப்படும். அதை கண்டு கொள்ள தேவையில்லை.