பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை., வெளிநாட்டு வேலை., நல்ல சம்பளம்., அழைப்பு வருகிறதா..! வாழ்க்கையை இழந்துவிட வேண்டாம்.!!

Share:
பொது விழிப்புணர்வுக்காக: கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடும் அனைவரும் தங்களால் முடித்த அளவிற்கு தாங்களே நேரடியாக வேலையினை தேடுங்கள். அனைத்து வலைத்தளங்களும் இது போன்ற மோசடியில் ஈடுபடுவதில்லை., இதனை தவறான விசயத்தில் உபயோகம் செய்யும் சில நிறுவனத்தால் வேலை தேடும் பல இளைஞர்களின் வாழ்கை பாதிப்படைந்துள்ளது. 

தமிழகத்தினை பொறுத்த வரையில் ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவ - மாணவியர்கள் தங்களின் கல்லூரி படிப்பினை முடித்துவிட்டு தனது படிப்பிறக்கான வேலையும்., வெளிநாட்டு வேலைகளுக்கும் பல வகையில் முயற்சித்து வருகின்றனர். 

அந்த வகையில் வேலை தேடும் அனைவரும் தங்களின் சுய விவரங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து தங்களுக்கு வேலை கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் பலர் இருந்து வருகின்றனர். இந்த விபரங்களை சேமிக்கும் சில போலி தனியார் அமைப்புகள் அந்த விபரங்களை கைப்பற்றி அவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார்கள்.அவர்கள் தங்களின் விவரத்தினை இணையத்தளத்தில் பார்த்ததாகவும்., வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை அமைத்து கொடுப்பதாக பேசி அவர்களிடம் இருந்து நூதன முறையில் அவர்களை ஏமாற்றி வருகின்றனர். 

அந்த வகையில் சென்னை வளசரவாக்கம் பகுதியை சார்ந்த அமுதா என்பவர் ஆக்ட்ரான் டெக்னாலஜி மற்றும் அனலிஸ்ட் ஹெச்.ஆர் ஆகிய நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். 

இவர் இணையதளத்தில் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்பவர்களின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களிடம் பெரிய தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக பேசியுள்ளார்.


இவர்களின் பேச்சினை நம்பிய சிலரிடம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.இலட்சம் வரையில் பணத்தை நூதன முறையில் பெற்றுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக அமுதாவின் மகள்களான மோனிஷா., பூஜா மற்றும் அவர்களின் நிறுவனத்தில் பணியாற்றிய பவானி மற்றும் லட்சுமி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். 

வெளிநாட்டிற்கு செல்ல பணம் அளித்து பலமாதங்கள் ஆன நிலையில்., வேலை யாருக்கும் ஏற்பாடு செய்யாததால் பணம் அளித்தவர்கள் அவர்களை நேரடியாக அலுவலகத்திற்கு சென்றும்., அலைபேசியில் தொடர்பு கொண்டும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். அவர்கள் பணம் தர மறுத்துள்ளனர்.

இதனால் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். 

இவர்களிடம் பணம் வழங்கிய அனைவரும் படிப்பினை முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்ததும்., சென்னையில் உள்ள பிரபல நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி இலட்ச கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 


பொதுநலன்: இது போன்ற நிறுவனங்கள் தங்களை இயன்ற அளவு பேசியே ஏமாற்றம் செய்வார்கள். எந்த ஒரு வேலைக்காகவும் உரிய விசாரணை இல்லாமல் அவசரப்பட்டு பணத்தினை கட்டவேண்டாம்.. அவர்களுக்கு தேவை பணம். அந்த பணத்திற்க்காக நாம் மற்றும் நமது குடும்பம் உழைத்த உழைப்புகள் அவர்களுக்கு தெரியாது...