பிளிப்கார்ட்டில் டெபிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்குவது எப்படி?

Share:
இப்பொழுது அனைவரும் விரும்புவது விலை உயர்ந்த மொபைல் போன்களை மட்டுமே. ஆனால் அந்த மொபைல்களை வாங்க நம்மிடம் காசு இருக்காது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் இஎம்ஐ ஆப்சன். இ எம் ஐ மூலமாக விலை உயர்ந்த பொருள்களை தவணை முறையில் வாங்கி பயன்பெறலாம். இ எம் ஐ ஆப்சன் கடைகளில் நேரடியாகச் சென்றும் இ எம் ஐ ஆப்ஷன் மூலம் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

ஆனால் அதற்கு முன் தொகையாக அட்வான்ஸ் செலுத்த வேண்டும். ஆனால் இ எம் ஐ மூலமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கும்பொழுது அட்வான்ஸ் செலுத்தத் தேவையில்லை. மாதம் மாதம் தவணை தொகையை செலுத்தினால் போதுமானது.


ஆன்லைன் மூலம் இஎம் ஐ வாங்குவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்,கடைக்கு மாதமாதம் சென்று தவணை தொகையை செலுத்த தேவையில்லை.முன்பணம் செலுத்த தேவையில்லை.
அதிக தவணை செலுத்தும் நாட்கள் கிடைக்கும்.நிறைய மாடல்கள் ஆன்லைனில் இருக்கும் நமக்கு பிடித்ததை வாங்கிக் கொள்ளலாம்.

இதுவரை ஆன்லைன் மூலமாக இ எம் ஐ வசதியை பெற வேண்டுமென்றால் அந்த நபர் க்ரெடிட் கார்ட் அல்லது பஜாஜ் இஎம்ஐ கார்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மிடம் உள்ள ஏடிஎம் கார்டு அதாவது டெபிட் கார்டை பயன்படுத்தி இஎம்ஐ மூலமாக ஆன்லைனில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

டெபிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க என்ன தகுதி இருக்க வேண்டும்.


ஆன்லைன் மூலமாக டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்களை வாங்க ஒரு சில விதிமுறைகளை வகுக்கப்பட்டுள்ளது.அதாவது நீங்கள் உங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க தகுதியுடையவரா என்று எப்படி தெரிந்துகொள்வது.நீங்கள் பிளிப்கார்ட்டில் போக பொருட்களை இஎம்ஐ வசதியை பயன்படுத்தி வாங்கலாம்.

அதற்கு நீங்கள் உங்கள் வங்கியில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் மொபைல் நம்பரிலிருந்து DCEMI என்று டைப் செய்து அதனை 57575 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

நீங்கள் தகுதி உடையவர் என்றால் பிளிப்கார்ட் இலிருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் நீங்கள் தகுதி உள்ளவரா அல்லது தகுதி இல்லாதவர் என்று கூறி விடும்.

பிளிப்கார்ட்டில் இதனைப் பயன்படுத்தி பொருட்களை வாங்க நீங்கள் பேமண்ட் ஆப்சன் கொடுத்த பிறகு இ எம் ஐ ஆப்ஷன் கேட்கும் அதனை செலக்ட் செய்து டெபிட் கார்டை செலக்ட் செய்ய வேண்டும். ஒவ்வொரு வங்கியைப் பொறுத்து கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உங்களது வங்கி எதுவோ அதனை செலக்ட் செய்து உங்களுடைய பேமெண்ட் ஆப்ஷனை முடித்துவிடலாம். இதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதாமாதம் தவணை தொகை ப்ளிப்காட்டிற்கு சென்று விடும் உங்களுக்கு பொருள் முன்னதாகவே கொடுக்கப்பட்டுவிடும்.