மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலில் தோற்கும்.! ஆருடம் சொல்லும் முதலமைச்சர்.!

Share:
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேரவேண்டும். எனக்கு மோடியை பார்த்து எந்த பயமும் இல்லை. நான் முதலமைச்சர் ஆன 7 ஆண்டுக்கு பிறகுதான் அவர் குஜராத் முதலமைச்சர் பதவி ஏற்றார். அவரை விட எனக்கு அதிக அனுபவம் உண்டு.

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு கடப்பா மாவட்டம் பொதட்டூரில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசுகையில் மாநில பிரிவினை சட்டப்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி கொடுத்ததை தொடர்ந்து கூட்டணியில் இருந்து வந்தோம். ஆனால் மாநில சிறப்பு அந்தஸ்தை தராமல் மத்திய அரசு ஏமாற்றியதால் கூட்டணியில் இருந்து விலகினோம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு நிச்சயம் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேரவேண்டும். எனக்கு மோடியை பார்த்து எந்த பயமும் இல்லை. நான் முதலமைச்சர் ஆன 7 ஆண்டுக்கு பிறகுதான் அவர் குஜராத் முதலமைச்சர் பதவி ஏற்றார். அவரை விட எனக்கு அதிக அனுபவம் உண்டு.

மத்திய தரசு கடப்பா மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலை அமைக்கும் என்று நாம் நீண்ட காலம் காத்து இருந்து விட்டோம். ஆனால் இதுவரை அதை அவர்கள் செய்யவில்லை. இதனால் நாமே ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்திருக்கிறோம். அடுத்து 2 நாட்களில் அமைச்சரவை கூடி அதற்கான அறிவிப்பை வெளியிடும் என்று அவர் பேசினார்.