கைகுழந்தையுடன் பணியாற்றியவர் சொந்த ஊருக்கு மாற்றம்

Share:
கைக்குழந்தையுடன் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய பெண் கான்ஸ்டபிள், சொந்த ஊருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

டி.ஜி.பி.,யின் கருணை


உ.பி., மாநிலம், ஜான்சி மாவட்டம் கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த பெண் கான்ஸ்டபிள் அர்ச்சனா ஜெயந்த் (30). இவர் கைக் குழந்தையை போலீஸ் ஸ்டேஷனின் வரவேற்பு அறை மேஜையில் உறங்க வைத்து விட்டு பணியாற்றிய புகைப்படம் வலை தளங்களில் பரவியது. இது குறித்து உ.பி., டி.ஜி.பி., பிரகாஷ் சிங் கூறியதாவது:

உத்தர பிரதேசம், கான்ஸ்டபிள் அர்ச்சனா ஜெயந்த் ,கோட்வாலி போலீஸ் ஸ்டேஷன், பெண் கான்ஸ்டபிள், கைக்குழந்தை, போலீஸ் ஸ்டேஷன்,     டிஜிபி பிரகாஷ் சிங், உ.பி.,ஜான்சி மாவட்டம், 
Uttar Pradesh, female constable, police station, Kotwali police station, constable Archana Jayant, DGP Prakash Singh, UP, Jhansi district,
பெண் கான்ஸ்டபிள் அர்ச்சனாவின் பெற்றோர் ஆக்ராவில் வசித்து வருகின்றனர். கணவரின் குடும்பத்தினர் கான்பூரில் உள்ளனர். அவரது கணவர் குர்கானில் பணியாற்றி வருகிறார். கைக் குழந்தையை பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் தான் பணியாற்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்துள்ளார். 

அவரது பணியை பாராட்டி ஜான்சி மாவட்ட ஐ.ஜி., ஆயிரம் ரூபாய் பரிசு அளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவரது சொந்த ஊர் என்பது கான்பூர் நகராகி விட்டது. பெண் கான்ஸ்டபிள்களை சொந்த ஊரில் பணியமர்த்த கூடாது என்ற விதி முறை உள்ளது. எனவே இது குறித்து அர்ச்சனாவிடம் பேசினோம். பெற்றோர் வசிக்கும் ஆக்ராவுக்கு பணி மாற்றம் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி உடனே அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

அர்ச்சனா கூறுகையில், '' கடந்த 2016ம் ஆண்டு முதல் ஜான்சி மாவட்டத்தில் பணியாற்றி வந்தேன். எனது 10 வயது மூத்த மகள் கணவரின் பெற்றோருடன் வசித்து வருகிறாள். நீண்ட காலத்திற்கு பிறகு குடும்பத்தினருடன் இணைய உள்ளேன்,'' என்றார்.