ஏழை நாடாகும் இந்தியா

Share:
கேஸ் விலை 1000ஐ தொட்டுவிட்டது. பெட்ரோலும், டீசலும் 100-ஐ நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40-50% வரை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு,வெற்று காகிதத்திற்கு இணையாக சரிந்துகொண்டிருக்கிறது.

மறுபுறம்....கடந்த 6 மாதங்களில் SBI வங்கியில் மட்டும் 50 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளது. கடந்த ஐ.மு ஆட்சிக்காலத்தில் 2.3 லட்சம் கோடியாக இருந்த வங்கிகளின் வராக் கடன்கள் இப்போது 7.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளன. இதில் கார்பரேட் நிறுவனங்களின் பங்கு 97%.

Image result for ஏழை  இந்தியா
நியாயப்படி இந்த நாட்டில் ஒரு பிரளயம் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் வெகுமக்கள் ஜடங்களாக மாற்றப்பட்டுள்ளனர். Me too பாலியல் குற்றச்சாட்டுகள் தொடங்கி, ஐயப்பன் வரை இடத்திற்கு தக்கபடி சாதி, மத, சமூக பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களை மடைமாற்றும் வேலைகள் கன கச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த களேபரச் சூழலில் ராணுவ ஒப்பந்தங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் என அம்பானி, அதானி வகையறாக்களுக்கு நாட்டின் வளங்கள் தொடர்ந்து தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என குளறுபடியான பொருளாதார நடவடிக்கைகளால் சிறு,குறு தொழில்கள் நசிந்து, வர்த்தகம் முடங்கி கோடானு கோடி இந்தியர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களில் ஆகப் பெரும்பான்மையினர் யார் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவர்களின் துயரங்கள் பற்றி அதிகாரத்தில் இருப்பவர்கள் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே மோடியும், அவரை இயக்கும் கும்பலும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் முதல் எதிரி என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.