வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், ரேசன் பொருட்களை முன்கூட்டியே வழங்க தமிழக அரசு முடிவு!

Share:
தமிழக அரசின் நியாய விலை கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ரேசன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உணவு துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

தமிழ்நாட்டில் மொத்தம் 32,894 ரேசன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில், 3.4 சதவீத கடைகளின் பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வராமல் போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கும், மாற்று ஏற்பாடுகள் செய்து, மக்களுக்கு உரிய காலத்தில் ரேசன் பொருட்கள் கிடைக்க மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், ரேசன் பொருட்களை முன்கூட்டியே கொண்டு சேர்த்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை நாட்களிலும் பொருட்கள் எளிதாகவும், விரைவாகவும் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.