இனி அனைத்து எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு, சைக்கிளில் தான் வர வேண்டும்! சபாநாயகர் அதிரடி

Share:
புதுவை சட்டப்பேரவை சபாநாயகர் வைத்திலிங்கம் இன்று புதுவை சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்து அனைவரையும் ஆசிரியப்படுத்தி உள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவர் சபாநாயகராக இருந்து வருகிறார். இவர் பொதுவாக தனது வீட்டில் இருந்து சட்டப்பேரவைக்கு செல்ல தனது அதிகாரப்பூர்வ வாகனத்தைப் பயன்படுத்தி வருகிறார். 
இந்நிலையில், இன்று தனது அதிகாரப்பூர்வ வாகனத்தை பயன்படுத்தாமல், தனது சைக்கிள் மூலம் சட்டப்பேரவை சென்றார். அவருடன் அவரது கட்சியினர் சிலரும் மிதிவண்டியில் பயணம் செய்து சட்டசபைக்கு சென்றனர். 

இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

இதை தொடர்ந்து, வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.