18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் திடீர் திருப்பம்.. சமூக ஆர்வலர் கிளப்பிய பொறி..? மக்கள் புரட்சி வெடிக்க போகிறதா..?

Share:
சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியே என்று நீதிபதி சங்கரநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.இதோடு இடைத்தேர்தல் நடத்த இருந்த தடையும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த தடையும் நீங்கியுள்ளது.

தீர்ப்பு விவகாரத்தில் அதிரடியாக செயல்பட்ட நீதிமன்றம், மக்கள் நலன் குறித்த விடயத்தில் ஏன் சோடை போனது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இப்படி 18 தொகுதிகளில் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படாமல் போகும் அளவிற்கு இதற்கு முன்னர் தமிழகத்தில் எந்த காலத்திலும் ஒரு நிலை வந்ததில்லை.

இந்திய அரசியலமைப்பின் படி அரசாங்கம் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்தாக வேண்டும்.

அவை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் ஊடாகவே செய்யப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.

ஓட்டு போட்ட ஒரு குற்றத்திற்காக அடிப்படை தேவைகள் கூட நிறைவேற்றப்படாமல் தினம் தினம் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தார்கள், அதற்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது சரி அது அவர்களின் தனிப்பட்ட செயலுக்கு நேர்ந்த நிலைமை.

ஆனால் மக்கள் நல விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட்டு இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இவ்வளவு நாட்கள் ஒரு முடிவே இல்லாமல் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், இனி தேர்தலை குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறி இருந்தால் விரைவில் தேர்தல் நடந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அந்த தொகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட பணிகள் எல்லாம் விரைந்து முடிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கும்.

ஆனால் நீதிமன்றம் வெறுமனே தகுதி நீக்க வழக்கில் மட்டும் தீர்ப்பு வழங்கி உள்ளதால், சம்பந்தப்பட்ட தொகுதி மக்களின் வாழ்வாதாரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.