18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா? தலைமை தேர்தல் ஆணையர் பதில்

Share:
தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய #18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் நீக்கியது.

இது தொடர்பாக தலைமை தேர்தல் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாவது: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் காலியிடங்களை ஏற்படுத்தும். காலி இடங்கள் ஏற்படும் போது, 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்த வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் தான் தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வாய்ப்பு உள்ளதால், அதற்கு பிறகே முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.#18MLA
தலைமை தேர்தல் ஆணையர், ராவத், இடைத்தேர்த்
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், லோக்சபா தேர்தலோடு சேர்த்து, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். 18 தொகுதிகள் காலி என சட்டசபை செயலகம் கூறியபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தும் தொகுதிகளில் சட்டம் ஒழுங்கு, தேர்தல் சூழல் குறித்து ஆராயப்படும். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கின் நிலை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.#18mla