இனி இந்தியாவுக்கு மானியம் இல்லை: டிரம்ப்

Share:
மற்ற நாடுகளை விட நாம் வளர வேண்டும் என்பதற்காக, இந்தியா மற்றும் சீனாவிற்கான மானியத்தை நிறுத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

முட்டாள்தனமானது

US, united states, Subsidies, India, China, Trump, இந்தியா, அமெரிக்கா, டிரம்ப், சீனா,அமெரிக்காவின் டகோடா நகரில் உள்ள பார்கோ என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசியதாவது: சில நாடுகள் வளரும் பொருளாதார நாடுகள். சில நாடுகள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதற்காக நாம் மானியம் வழங்குகிறோம். இது அனைத்தும் முட்டாள்தனமானது. இந்தியா, சீனா போன்ற நாடுகளை, வளரும் நாடுகள் என சொல்கிறோம். அவை வளரும் நாடுகள் என சொல்லி அந்தபிரிவில் மானியம் பெறுகின்றன. அந்த நாடுகளுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். இது அனைத்தும் முட்டாள் தனம். இதை நாம் நிறுத்த போகிறோம். நாம் வளர்ந்த நாடு.இது உண்மை. அந்த பிரிவில் தான் நாம் இருக்கிறோம். மற்ற நாடுகளை விட நாம் வளர்ச்சி பெற வேண்டும். 
சீனா மீது தாக்கு

உலக வர்த்தக அமைப்பு மோசமானது என நினைக்கிறேன். சீனா பெரிய பொருளாதார நாடாக மாற அந்த அமைப்பு ஏன் அனுமதிக்கிறது என பலருக்கும் தெரியவில்லை. நான் ஜிங் பிங்கின் மிகப்பெரிய ரசிகன். அவரிடம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் எனக்கூறினேன். ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நம்மிடம் எடுத்து கொண்டு, அந்நாட்டு மறுகட்டமைப்பு செய்வதை அனுமதிக்க முடியாது. பணக்கார நாடுகள், வெளிப்புற ஆபத்திலிருந்து பாதிக்கப்படாமல், நாம் பாதுகாப்பதால், அந்த நாடுகள் அமெரிக்காவிற்கு பணம் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.