உங்க போன் அடிக்கடி ஹேங்க் ஆகுதா?… ரெண்டே நிமிஷத்துல எப்படி சரிசெய்யலாம்?

Share:
ஸ்மார்ட்போனில் நமக்கு உணடாகிற இரண்டு முக்கியப் பிரச்னைக்ள புட்டரி நீடித்து இருக்காதது, மற்றொன்று ஹேங் ஆவது. இந்த இரண்டு பிரச்னையும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருப்பது தான்.

இந்த ஹேங்கிங் பிரச்னையில் இருந்து மீள வேண்டுமானால் உங்கள் போன் ரீ ஸ்டோர் செய்யப்பட வேண்டும். அப்படி ரீ ஸ்டோர் செய்யும்பொழுது உங்கள் மொபைலில் உள்ள டேட்டாக்கள் அழிந்து போய்விடும்
ஆனால் டேட்டாக்கள் எதுவும் அழியாமல், அப்ளிகேஷன்கள் எதுவும் இல்லாமல் எப்படி போனை ஹேங்கிங் பிரச்னையில் இருந்து சரி செய்வது?

முதலில் நம்முடைய போன் ஹேங் ஆவதற்குக் காரணமே நாம் பயன்படுத்தும் மொபைல் அப்ளிகேஷன்களின் கேட்சிகளால் தான்.

அதனால் ரீபூட் செய்யாமல் எளிமையாக எப்படி ஹேங்கிங் பிரச்னையை சரி செய்யலாம்?

முதலில் உங்களுடைய போனை ஸ்விட் ஆஃப் செய்யுங்கள்

அடுத்து, வால்யூம் பட்டனையும் பவர் பட்டனையும் ஒரே சமயத்தில் அழுத்துங்கள்.


அப்போது ஆண்டிராய்டு ரெக்குவரி என்று ஒரு திரை தோன்றும். அதில் ஒரு பட்டியல் தோன்றும். அந்த லிஸ்டில் ஐந்தாவதாக உள்ள வைப் கேச்சி பார்ட்டீசியன் (wipe cache partition) என்றிருக்கும். அதைத் தேர்வு செய்துகொண்டு, அதன்பின் பவர் பட்டனை அமுக்கவும்.

சக்சஸ் என்று வந்தவுடன் ரீபூட் சிஸ்டம் நவ் (reboot system now) என்று வரும். அதைத் தேர்ந்தெடுங்கள். கடைசியாக ஒருமுறை உங்கள் போன் செட்டிங்க்ஸ்ஸில் உள்ள ரீஸ்டோர் என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

மற்ற ரீபூட் முறைகளைப் போன்று இதில் டேட்டாக்கள் எதுவும் அழிந்து போகாது. உங்கள் போனில் உள்ள டேட்டாக்கள் பத்திரமாக இருக்கும். அதேபோல், போனின் வேகமும் அதிகமாகும். ஹேங்கிங் பிரச்னையே வராது.