கிழிந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நிபந்தனை

Share:
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க, மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000, ரூ.200 நோட்டுகள் கிழிந்து விட்டால் மாற்ற இயலாது எனவும் அறிவித்திருந்தது.

இதையடுத்து இது குறித்து புதிய முடிவுகளை ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 109.56 சதுரசெ.மீ கொண்ட 2000 ரூபாய் நோட்டின் அளவில், 88 சதுரசெ.மீ வரை கிழிந்திருந்தால் அதற்கு முழு பணமும், 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே வங்கியால் அளிக்கப்படும்.
அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்பட மாட்டாது. அதேபோல் தான் 200 ரூபாய் நோட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.