இனி, மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்!

Share:
ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது நிறுவனத்துக்கும் பாலிசிதாரருக்கும் இடையே செய்யப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தம். இதில் பாலிசிதாரருக்கு ஏற்படும் மருத்துவச் செலவை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன. ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கியுள்ள நிறுவனங்கள், பாலிசிதாரர்களுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ரொக்கமாக அளிக்கும், இல்லையென்றால் மருத்துவமனையில் பணம் கட்டாமல் சிகிச்சை பெற உரிய நடவடிக்கை எடுக்கும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. தனிநபர், குடும்பம் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பாலிசிகள் இருக்கி்ன்றன. ஒவ்வொரு பாலிசிக்கும் நிறுவனங்கள் தனியாக விதிமுறைகள் வைத்துள்ளன.பொதுவாக, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்கும் நிறுவனங்கள் தற்போது மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்குப் பாலிசி வழங்குவதில்லை. இந்த நிலையில் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் (IRDA), `இன்ஷூரன்ஸ் ஹெல்த் பாலிசியில் மனநலம் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சையையும் சேர்க்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

மனநலம்தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை நீண்ட காலம் எடுப்பதாலும், அதற்கான மருத்துவச் செலவு அதிகமாக இருப்பதாலும், பாலிசி நிறுவனங்கள் இதற்குச் சிகிச்சை அளிக்கவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு தேசிய அளவில் நடத்தப்பட்ட மனநலம் குறித்த ஆய்வில் 15 சதவிகித இளைஞர்கள், இளம்பெண்களுக்கு மனநலம் தொடர்பான சிகிச்சை தேவைப்படுகிறது என்று தெரியவந்துள்ளது. எனவே, இந்தச் சமயத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மன நலம்தொடர்பான சிகிச்சையைச் சேர்ப்பது மிகவும் பலன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

IRDA உத்தரவைத் தொடர்ந்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மனநலம் தொடர்பான சிகிச்சைஅளிக்கப்படுவது குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆலோசகர் மனோகரனிடம் பேசினோம்.


‛‛மனநலச் சட்டம் 2017 கடந்த மே மாதம் 29-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 21(4)-யின் படி, பாலிசி அளிக்கும் நிறுவனத்தினர், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் உடல்நலம் குறித்த நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதுபோல், மன நலம் தொடர்பான சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என IRDA உத்தரவிட்டுள்ளது. அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இந்த உத்தரவைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து செயல்படுத்த வேண்டும்தற்போது, நாடு முழுவதும் 33 பொது காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மனநலன் தொடர்பான சிகிச்சைகளுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்குவதில்லை. மனநலம் தொடர்பான நோயின் தன்மையைப் பொறுத்து இதர நாடுகளில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

மனநோயானது சிந்தனை, மனநிலை, உணர்தல், நோக்குநிலை அல்லது நினைவகம் ஆகியவற்றின் கணிசமான சீர்கேடாக வரையறுக்கப்படுகிறது. இது தீர்ப்பு, நடத்தை மற்றும் திறன் ஆகியவை உண்மையில் உணர்தல் அல்லது வாழ்க்கைத்தரத்தின் சாதாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனை அடையுதல் என்றும் கூறப்படுகிறது. ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் மனநலன் பாதிப்பு தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பான விஷயம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.#health insurence

மனநல நோய்கள் தொடர்பாக, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அவற்றின் பிரீமீயத்தை மாற்றி அமைத்து IRDA-விடம் தெரிவிக்க வேண்டும். தற்போது, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன’’ என்றார்.#health insurence