குடித்துவிட்டு வந்த கணவனை தாக்கி உடைகளை நீக்கி போலீசிடம் ஒப்படைத்த பெண்

Share:
மது போதை தலைக்கேறிய நிலையில் குடிகாரர்கள் செய்யும் இந்த செயல் அவர்களை தர்மசங்கடத்துக்கு இட்டுச்சென்று விடும். அப்படி சம்பவம் தான் ராஜ்கோட்டில் நடந்துள்ளது. குடித்து விட்டு வந்த ஜிக்னேஷ் ரத்தோட் என்பவரை அவரது மனைவி ஹீனா சராமாரியாக தாக்கி உடை நீக்கப்பட்ட நிலையில் போலீசில் ஒப்படைத்துள்ளார். இந்த புகாரை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கணவன் ஜிக்னேஷ் ரத்தோட்டை ஹீனா பிரிந்து சென்றுவிட்டதாகவும், தற்போது அவர் வேறொரு ஆணுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.