டாஸ்மாக் கடையை முடக்கிய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.!!

Share:
மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் 1917 ஆம் வருடம், ஜனவரி 17-ல் பிறந்தார். இவர் பிறந்து தற்போது 100 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையடுத்து அதிமுக அரசு கடந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பல கோடி செலவு செய்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்பாக கொண்டாடியது. 
இன்று (30.9.2018) சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா வருகின்ற நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சென்னையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து, தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். 

இந்த விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள்உட்பட பலரும் கலந்து கொடு உரையாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியின் அதிக அளவில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த விழாவிற்கு கலந்துகொள்ள வந்த அதிமுக தொண்டர்கள் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது.