தமிழகர்களுக்கு மாபெரும் வெற்றி.! முற்றிலும் நிறுத்தப்பட்டது.! மொத்த திட்டமும் நிலைகுலைந்து.!!

Share:
பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கோபமாக சில கேள்விகளை எழுப்பியது.
அதில், தடையை மீறி 8 வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டுவதா? சாலைக்காக மரம் வெட்டினால் முறையான காரணம் சொல்ல வேண்டும். திட்டத்தின் அறிக்கையில் எங்கும் மரம் வெட்டுவதாக ஏன் கூறவில்லை. திட்டத்தில் அப்படி இருக்கும் பகுதிகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

எந்த சூழ்நிலையில் மரம் வெட்டப்படுகிறது என்று கூற வேண்டும் எனவும் தேவையில்லாமல் மரங்களை வெட்ட கூடாது எனவும் சேலம் சாலைக்காக மரங்களை வெட்டியது ஏன் எனவும் மரங்களை வெட்டமாட்டோம் என்று கூறிவிட்டு வெட்டியது ஏன் எனவும் கூறிய நீதிமன்றம் தமிழக அரசின் நடவடிக்கை முறையற்றது எனவும் கூறியுள்ளது.

நிலம் அளவிடுவதாக கூறிவிட்டு ஏன் கையகப்படுத்தினீர்கள்? உங்கள் நிலத்தை கையகப்படுத்தினால் பொறுத்துக் கொள்வீர்களா? என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர். தமிழக அரசு இப்படியே செயல்பட்டால் திட்டத்திற்கே தடை விதிக்க வேண்டி வரும். தமிழக அரசு சேலம் சாலையால் ஏற்படும் சமூக பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை செய்ததா? அப்படியென்றால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 

தமிழக அரசு இதில் உடனடியாக பதிலளிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த சாலை திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க நேரிடும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இந்நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்த போது, மத்திய அரசு ஒரு அறிக்கை தாக்கல் செய்தது, அதில், ''இந்த 8 வழி சாலை திட்டத்தை மாற்றி அமைக்க இருப்பதாகவும், இந்த திட்டத்தின் திட்ட மதிப்பை குறைக்க இருப்பதாகவும், இந்த அறிக்கையில் உள்ளவைகள் அனைத்தும் கருத்துரு மட்டும் தான், இதில் எந்த இறுதி முடிவும் எடுக்கபடவில்லை'' என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில், ''மத்திய அரசின் இந்த அறிக்கையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளது. இதை காரணமாக கொண்டு இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு, ஏன் தடை விதிக்க கூடாது?'' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''சேலம் சென்னை 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்து இருப்பதாகவும், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பணிகளை தொடங்க மாட்டோம். இன்னும் இரு வாரங்கள் நிலம் கையப்படுத்தப்படும் பணி நிறுத்திவைக்கப்படும்'' என்றும் உறுதியளித்தார். 

இதனையடுத்து, முறைகேடாக சாலை ஓரம் உள்ள மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தமிழக அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். இதற்க்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞ்சர். ''இந்த விடயத்தில் கிராம நிர்வாகி உட்பட 5 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், 5 பேர் மீது வழக்கு பதிய செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பேரை கைது செய்து, தற்போது அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ளதாகவும், மீதம் மூன்று பேர் தலைமறைவாகிவிட்டதாகவும்'' தெரிவித்தார். 

இதனையடுத்து நீதிபதிகள், ''அவர்களின் ஜமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் தலைமறைவான 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரம் வெட்டப்பட்டது சம்பந்தமாக வனத்துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் 20 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.