பாஜகவின் அஸ்திவாரம் பதவி விலகல்.! மோடிக்கு நெருக்கடி.!! ராகுல் போர்க்கொடி.!!

Share:
வங்கிக் கடன் கட்டாத காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 

இந்தியாவிற்கு மல்லையாவை கொண்டு வரும் வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் மல்லையா பேசினார். அப்போது அவர் நாட்டை விட்டு புறப்படும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை கடன்களை திரும்ப செலுத்துவது குறித்து பேச சந்தித்தேன் என கூறியுள்ளார். நாட்டில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் என்னை பிடிக்கவில்லை என்றவர், நான் பலிகடாதான் அதனை உணர்கிறேன் எனவும் கூறியுள்ளார். ஜெனிவாவில் கூட்டம் இருந்தது அதனால் தான் நான் நாட்டை விட்டு வெளியேறினேன் என்றும் அவர் கூறினார். 
மேலும் நாட்டைவிட்டு போகும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன். வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதாக அவரிடமும் தெரிவித்தேன். ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் பயணிக்கிறது அதனை நீதிமன்றமே முடிவு செய்யட்டும் எனவும் கூறியுள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான வழக்கு மீண்டும் டிசம்பர் 10 ஆம் தேதிக்கு வருகிறது. 

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, வங்கிகளுக்கு கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக விஜய் மல்லையா கூறியதை நான் பார்த்தேன். அவர் கூறியது தவறு. அவர் சந்திப்பின் உண்மையை கூறவில்லை. கடந்த 2014லிலிருந்தே விஜய் மல்லையாவுக்கு சந்திப்புக்கான எந்த அனுமதியும் வழங்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே பலமுறை பொய்யாக வாக்குறுதி அளித்ததால் அவருடன் நான் பேசாமல் சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், அருண் ஜெட்லீ பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்ததாவது, ''விஜய் மல்லையா லண்டன் செல்லும் முன் அருண் ஜெட்லீயை சந்தித்துள்ளார். அவர் வெளிநாடு செல்ல இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் நான் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லீ பொய் சொல்கிறார் என குற்றசாட்டியுள்ளார். 

மேலும், ''குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி உடனே சுதந்திரமான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் நிதியமைச்சர் பதவியில் இருந்து அருண் ஜெட்லி விலகவேண்டும் என்றும் ராகுல்காந்தி அதிரடியாக தெரிவித்துள்ளார்.