55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

Share:
சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.


Image result for சபரிமலை55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார், தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும்.


இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும், நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும்.


21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.


தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும், தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.