தமிழக மக்களே உஷார்!! அடுத்த 2 மாதங்களில் 2 புயல்கள்; எப்படி சமாளிக்கப் போகிறோம்!!

Share:
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் கோவை,நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஓரளவு பெய்தது. மற்றபடி சென்னை உட்பட எந்த மாவட்டங்களிலும் மழை இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையால் தான் அதிகமான மழைப்பொழிவு இருக்கும். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தென் மேற்கு பருவமழை காலகட்டம் முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 க்குள் பலத்த காற்றுடன் கூடிய மழையும் கடுமையான புயலும் தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 25 நாட்களில் இரண்டு புயல்கள் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 
அந்த புயல்கள் நாகப்பட்டினம் வழியாக கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை கன மழை கட்டாயம் உண்டு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் கனமழை மற்றும் புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை உடன் தமிழக மக்கள் தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.