ரூ.159-க்கு 28 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் இப்போது அனைவருக்கும்

Share:
வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.159 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அமைந்துள்ளது. #Vodafone #offers


வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ.159 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் சலுகைக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அமைந்துள்ளது. #Vodafone #offers

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுடனான போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் வோடபோன் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது. 

புதிய வோடபோன் சலுகை ரூ.159 விலையில் கிடைக்கிறது. புதிய சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிகளவு டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ.159 சலுகை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.149 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.
வோடபோன் ரூ.159 புதிய சலுகையில் 28 ஜிபி 3ஜி அல்லது 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியா முழுக்க அனைத்து 4ஜி வட்டாரங்களிலும் வோடபோன் புதிய சலுகை வழங்கப்படுகிறது, மேலும் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய சலுகை வோடபோன் வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை.

இத்துடன் புதிய சலுகை சென்னை, ஆந்திரா, மும்பை, டெல்லி மற்றும் குஜராத் போன்ற வட்டாரங்களிலும் இதுவரை வழங்கியதாக தகவல் இல்லை. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வோடபோன் ரூ.159 சலுகையில் 28 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும், முழு வேலிடிட்டிக்கும் 100 பிரத்யேக நம்பர்களுக்கு அழைக்க முடியும் என வோடபோன் தெரிவித்துள்ளது. 28 ஜிபி டேடட்டா, தினமும் 1 ஜிபி வீதம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. வெவ்வேறு வட்டாரங்களில் எஸ்.எம்.எஸ். சலுகையை மாற்றுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். சில இடங்களில் முழு சலுகைக்கும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து வழங்கி வரும் ரூய149 சலுகையில், எவ்வித கட்டுப்பாடும் இன்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. 

ஏர்டெல் வழங்கும் ரூ.149 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித கட்டுப்பாடும் இன்றியும், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 1 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் வரை இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது