கருணாநிதியின் இறுதிசடங்கால் டி .டி.வி. தினகரனுக்கு குவியும் பாராட்டு!

Share:
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, வயது முதிர்ச்சி மற்றும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர், நேற்று முன் தினம் மாலை 6:10 மணியளவில் உயிரிழந்தார்.

கலைஞர் கருணாநிதியின் மறைவால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், கலைஞரின் மறைவுக்கு இந்தியா முழுவதிலிருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ராணுவ மரியாதையுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறம் இறுதி சடங்கு செய்யப்பட்ட காட்சி பல தொலைக்காட்சியில் நேரலை செய்யப்பட்டது.


குறிப்பாக ஜெயா பிளஸ் தொலைக்காட்சியிலும் கலைஞரின் அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்கு நேரலை செய்யப்பட்டது. ஆனால் கலைஞர் தொலைக்காட்சியில் ஜெயலலித்தாவில் இறுதிச்சடங்கு ஒளிபரப்பவில்லை.

கருணாநிதியின் அஞ்சலி மற்றும் இறுதிச்சடங்கை ஒளிபரப்பு செய்ததால் தினகரனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.