அரசு கேபிள், 'டிவி'யில் சிக்னல் கோளாறு: தனியார் நிறுவனத்தை ஊக்குவிக்க சதியா?

Share:
தமிழகம் முழுவதும், தனியார் கேபிள், 'டிவி' சிக்னலை ஊக்குவிப்பதற்காக, அரசு கேபிள், 'டிவி' சிக்னலில் பழுது ஏற்படுத்தும் சதி நடப்பதாக, அரசு கேபிள், 'டிவி' கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.தமிழகத்தில், 2007ல், அரசு கேபிள், 'டிவி' செயல்பாட்டிற்கு வந்தது; 2011 முதல், குறைந்த கட்டணமாக, 70 ரூபாய்க்கு, 100 சேனல்கள் வழங்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட நான்கு மாநகரங்களில், 2014ல், டிஜிட்டல் முறையில், கேபிள், 'டிவி' சேவை துவங்கப் பட்டது.இதுவரை, தமிழகம் முழுவதும், 24 லட்சத்துக்கும் அதிகமான, 'செட் - டாப் பாக்ஸ்'கள், சந்தாதாரர்களுக்கு இலவசமாக

வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிவதில்லை என்ற, புகார் எழுந்தது.

தெரியவில்லை :

இதுகுறித்து, கோவில்பட்டியைச் சேர்ந்த, மங்களேஸ்வரி கூறியதாவது:எங்கள் வீட்டில் சில மாதங்களாக, அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிய வில்லை. இதுபற்றி, கேபிள் ஆபரேட்டரிடம் புகார் அளித்தும், சரி செய்யப்படவில்லை. இதனால், தனியார் கேபிள், 'டிவி'க்கு மாற முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


புகார் தொடர்பாக, கேபிள், 'டிவி' ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கூறியதாவது: சில மாதங்களாக, அரசு கேபிள்,'டிவி' சிக்னல் சரியாக கிடைப்பதில்லை. அரசு கேபிள், 'டிவி'யின் பிரதான சர்வரிலிருந்து, மாவட்டங்களில் உள்ள, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு சிக்னல் நன்றாக கிடைக்கிறது. 

தனியார் கேபிளை ஊக்குவிக்கும் நோக்கில்,

எம்.எஸ்.ஓ.,க்கள், சிக்னல் தரத்தை குறைப்ப தாக புகார் எழுந்துள்ளது. இதனால், அரசு கேபிள், 'டிவி' சரியாக தெரிவதில்லை என, பெரும்பாலான மக்கள், இணைப்பை துண்டிக் கின்றனர். 

சமீபத்தில், அரசு கேபிள், 'டிவி' நிர்வாக இயக்குனர், மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தினார். அவரிடம் எங்களின் குறைகளை தெரிவித்தோம். இதுவரை, எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.