சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.44,990 விலையான விவோ நெக் மொபைல், வெறும் 1,947 ரூபாய் மட்டுமே..!

Share:
சீன செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது.

வருகிற ஆகஸ்டு 15 ஆம் தேதி நாடு முழுவதும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது.
சீன செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, 'விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்' என்னும் சிறப்பு விற்பனையை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவித்துள்ளது. 

இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை விவோவின் பிரத்யேக ஈ-காமெர்ஸ் (shop.vivo.com/in) இணையதளத்தில் நடக்கும். 

இது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடியை விவோ நிறுவனம் அறிவித்துளளது. குறிப்பிட்ட விவோ திறன்பேசிகள், பிற துணைக் கருவிகள் வாங்கும் போது, கூப்பன் டீல்கள், கேஷ்பேக் சலுகைகள் ஆகியவற்றை பெறலாம். இந்த சிறப்பு சலுகையில் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ் விவோ வி9 கைப்பேசிகளும் அடங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்த விற்பனையின் சிறப்பு அம்சங்கள்: 

விவோ நெக்ஸ் மற்றும் விவோ வி9 கைப்பேசிகள் ரூ.1947 மட்டுமே , 

USB கேபிள்கள், இயர் ஃபோன்கள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. 

இந்த ஃப்ளாஷ் சேல் 3 நாட்களும் இரவு 12 மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரைத் தொடரும். 

இந்த 3 நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களுக்கு ரூ.4000 வரை கேஷ்பேக் பெறலாம். 

எல்லா விவோ திறன்பேசிகளுக்கும் 12 மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. 

ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ வி9 மற்றும் விவோ X21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசம்.