பயணிகள் எதிர்ப்பு எதிரொலி சொகுசுப் பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம்

Share:
பயணிகள் எதிர்ப்பு எதிரொலி சொகுசுப் பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றம்.பயணிகள் எதிர்ப்பு காரணமாகவும், அதிக பயணிகளை ஈர்க்கவும் 500 சொகுசு பேருந்துகளை சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் அரசு போக்கு வரத்து கழகங்கள் சார்பில் இயக் கப்படும் பேருந்துகளில் கட் டணத்தை உயர்த்தி கடந்த ஜனவரி 19-ல் அரசு உத்தரவிட்டது. மாற்றியமைத்துள்ள புதிய கட்டண நிலவரப்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதா ரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிக பட்சமாக ரூ.23, விரைவுப் பேருந்து களில் குறைந்தபட்சம் ரூ.7, அதிக பட்சம் ரூ.35, சொகுசுப் பேருந்து களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.12, அதிகபட்ச கட்டணம் ரூ.48 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சொகுசு கட்டணத்தி லேயே 1.200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அதிருப்பதியில் இருந்தனர். மேலும் ரயில், பகிர்வு ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்ட மாற்று போக்குவரத்து வசதிக்கு பெரும்பாலான மக்கள் மாறிவிட்டனர். சுமார் 30 சதவீத பயணிகள் மாநகர பேருந்துகளை புறக்கணித்தனர். குறிப்பாக, சொகுசு பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் காலியாகவே சென்றன.

இதையடுத்து, போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக் கவும், பயணிகளை மீண்டும் ஈர்க் கவும் சாதாரண கட்டண பேருந்து களை அதிக அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்கு வரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:

கட்டண உயர்வுக்குப் பிறகு மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்தது. எனவே, பயணிகளை மீண்டும் மாநகர பேருந்துகளுக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். இத னால், சுமார் 20 ஆயிரம் பயணி கள் மீண்டும் மாநகர போக்கு வரத்து கழக பேருந்துகளில் பய ணம் செய்ய திரும்பியுள்ளனர்.

மேலும், சாதாரண கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். தற்போது 1,250-க்கும் மேற்பட்ட பேருந்து களை சாதாரண கட்டணத்தில் இயக்கி வருகிறோம். சொகுசுப் பேருந்துகளில் பயணிகளின் வரவேற்பு குறைவாக இருப்பதால், சுமார் 500 சொகுசுப் பேருந்துகளை சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கி வருகிறோம். இந்தப் பேருந்துகளில் சாதாரண கட்டணம், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என தனி பலகை வைத்து இயக்கப்படுகிறது.