இதெல்லாம் உங்க வீட்டுல பண்ணுங்க: வைரலாகும் தோனியின் சைக்கிள் வீடியோ!

Share:
தோனியின் சைக்கிள் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் உங்க வீட்டுல பண்ணுங்க: வைரலாகும் தோனியின் சைக்கிள் வீடியோ!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடர், டி20 தொடர் என்று விளையாடியது. தற்போது, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டின் இன்று தொடங்குகிறது. இதில், பங்கேற்கும், இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் கூல் கேப்டன் தல தோனி, தனது விடுமுறை நாட்களை ரொம்ப ஜாலியாகவேக கழித்து வருகிறார். 

வெளியிடங்களுக்கு சென்று, சைக்கிள் ரைடிங், கமாண்டோ உடையில் போஸ், பைக் ரைடிங் என்று கலக்கி வருகிறார். இந்த நிலையில், நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் மழையில் நனைந்த படி சைக்கிள் ரைடிங் செய்வது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அப்போது, வாயில் ஒரு குச்சியையும், தலையில் ஹெட்போனையும் மாற்றிய படி மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு அப்படியே சைக்கிளில் சாகசம் செய்துள்ளார். ப்ளீஸ் இதைக் கொஞ்சம் வீட்டில் ட்ரை பண்ணுங்க என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.