முகத்தை மூடிக் கொண்டு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Share:
நல்ல வேளை எந்தவித விவாததிற்கும் இடம் அளிக்காமல் அவர் தனது முகத்தையே மூடிக்கொண்டார்மெக்சிக்கோவில் முகத்தை மூடிக் கொண்டு தாய்ப்பால் ஊட்டிய பெண்ணுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
தாய்ப்பால் ஊட்டிய பெண்:
தாய்க்கும், குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தத்தை ஏற்படுத்துவதும், பிறந்தவுடன் குழந்தைக்கு கிடைக்கும் முதல் பரிசாக பார்க்கப்படுவது தாய்ப்பால் தான். இன்றைய நவீன உலகில் தாய்ப்பால் கொடுப்பதை ஆபாசம் போல் பார்ப்பதாக பல விவாதங்கள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றில் பிரபல நடிகை குழந்தைக்கு பால் ஊட்டுவது போன்ற அட்டைப்படம் வைக்கப்பட்டது நீதிமன்றம் வரை சென்றது.

இந்நிலையில் மெக்சிகோவில் பெண் ஒருவர் ஹோட்டலில் அமர்ந்தப்படி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். தாய்ப்பால் கொடுக்கும் அந்த பெண் தனது முகத்தை துணியால் மூடியுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


கேரளாவில் வெளியான அட்டைப்படம்

இந்த புகைப்படத்தை அந்த பெண்ணின் உறவுக்கார பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பெண் கூறியிருப்பது ”படத்தில் இருக்கும் பெண்ணிடம் அவரின் மாமியார் குழந்தைக்கு பாலூட்டும் போது துணியால் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.அதைத்தான் அவளும் செய்துள்ளார். (துணியால் அவளது முகத்தை மறைத்துக் கொண்டாள்) என்று நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.


இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணிற்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். காரணம், அந்த பெண் முகத்தை மறைக்காமல் பொது இடத்தில் தாய்ப்பால் கொடுத்திருந்தால் அதையும் ஒரு விவாதப் பொருளாக மாற்றி இருப்பார்கள். நல்ல வேளை எந்தவித விவாததிற்கும் இடம் அளிக்காமல் அவர் தனது முகத்தையே மூடிக்கொண்டார் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.