திமுக அடித்தது அந்தர் பல்டி.! சற்றும் பின் வாங்காத தினகரன்.!!

Share:
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இது தமிழக மக்களிடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

ஏற்கனவே இருந்த ரூ.55 ஆயிரமாக இருந்த எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை ரூ.1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் சம்பளம் உயர்த்தப்பட்ட போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்ததால் காரணத்தால், இந்த சம்பள உயர்வு தங்களுக்கு தேவையில்லை என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளரிடம் அதிரடியாக கடிதம் கொடுத்தனர்.
இதேபோல் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனும் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் தேவை இல்லை என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற செயலாளரிடம் கொடுத்த அந்த கடிதத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதனை காரணமாக தமிழக அரசு, திமுக எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வை அளிக்க தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2017 ஜூலை, 1 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகை, தலா, ரூ.6.50 லட்சம் திமுக எம்.எல்.ஏக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு உள்ளது. மறைந்த முன்னாள் தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்பட அனைவருக்கும் இந்த நிலுவை தொகை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், தான் எடுத்த முடிவில் சற்றும் பின் வாங்காமல், சம்பள உயர்வு வேண்டாம் என்ற முடிவில் ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் உறுதியாக இருக்கிறார்.