நாடெங்கும் ட்ரெண்டாகி வரும் கிகி சேலங்ச்,விபரீத முயற்சியால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்.!

Share:
கிக்கி சேலஞ்சை செய்ய முயன்ற இளம்பெண் ஒருவர் காரிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கிறார்.

தற்போது உலகம் முழுவதும் கிகி சேலஞ்ச் எனப்படும் வித்தியாசமான சவால் வைரலாகி வருகிறது. இவ்வாறு வெவ்வேறு நாடுகளில் பரவி வந்த இந்த போட்டி தற்போது தமிழ்நாட்டிலும் வைரலாகிறது.

அதாவது கனடாவை சேர்ந்த டிரேக் என்ற பிரபல ராப் பாடகர் எழுதி வெளியிட்ட ”கி கி டூ யு லவ் மீ (kiki do you love me)” என்ற இன் மை பிலிங்ஸ்.ஆல்பத்தின் பாடல் பின்பக்கம் ஓட, காரோ, பைக்கோ, ரயிலிலோ பயணம் செய்பவர் கீழே இறங்கி, டான்ஸ் ஆடி கொண்டே வாகனத்தை பின்தொடர வேண்டும். அதுதான் சேலஞ்ச்.


இந்த விபரீத முயற்சியில் ஈடுபடும் பலரும் கோர விபத்துகளில் சிக்குகிறார்கள். கார்களும் சேதமாகிறது என இம்முயற்சிக்கு சமூக நல ஆர்வலர்களும் போலீசாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த லோவா நகரத்தில் வசித்து வரும் அன்னா ஓர்டன் என்ற 18 வயது இளம்பெண் இந்த கிக்கி சேலஞ்சை முயற்சி செய்துள்ளார். 


அப்பொழுது சவாலை செய்ய ஓடும் காரிலிருந்து கீழே இறங்க முயற்சித்தபோது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.அதில் அவரது தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே இளைஞர்கள் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இதை போன்று செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. .