7 முறை சாம்பியன் இந்திய கபடி அணியை தோற்கடித்தது ஈரான்

Share:
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கம் வென்ற சாதித்த இந்திய கபடி அணியை, இந்த ஆசிய போட்டியில் வென்று இந்தியாவை வெளியேற்றியுள்ளது. 

இந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைப்பெற்று வருகின்றன. 
iran men's kabaddi team beat 7 time champion india in asian game kabaddi event
இந்தியா மிகவும் ஆதிக்கம் செலுத்தி வரும் போட்டியான கபடியில், இந்த முறை சாதிக்க தவறியுள்ளது. 
இன்று நடந்த ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டி அரையிறுதி நடைப்பெற்றது. இதில் 7 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியும், ஈரான் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் இந்தியா 18-27 என்ற புள்ளி கணக்கில் ஈரான் அணியிடம் தோல்வியடைந்தது. 
இதன் மூலம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. 

இதுவரை ஆசிய போட்டியில் 7 முறையும், உலகக் கோப்பையை 3 முறையும் இந்தியா வென்று சாதித்துள்ளது.