கஜினிகாந்த் திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

Share:
Ghajinikanth: கஜினிகாந்த் திரை விமர்சனம் சினிமா விமர்சனம்

நடிகர்கள்: ஆர்யா,ஆடுகளம் நரேன்,சதீஷ்,சம்பத்,கருணாகரன்,நான் கடவுள் ராஜேந்திரன்
சினிமா வகைComedy
கால அளவு:139 minuts

விமர்சகர் மதிப்பீடு


‘பலே பலே மகாதிவோய்’ என்ற தெலுங்கு படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக்காக இந்த ‘கஜினிகாந்த்’ படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக ரீமேக் செய்யப்படும் போது ஏதாவது ஒரு சீன் அல்லது காமெடியை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றுவது வழக்கம். ஆனால் இந்த படத்தில் அப்படியே ‘ஈ அடிச்சான் காப்பி’ மாதிரி ரீ மேக் செய்துள்ளனர். 

கரு : 

ஆர்யா தனக்குள்ள மறதி பிரச்னைகளுக்கிடையே அதை ரகசியமாக வைத்து ஹீரோயின் சாயிஷா சைகல்லை காதல் செய்து எப்படி ஒன்று சேருகிறார் என்பது தான் கதை. 
இயக்குனர் : 

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஏற்கனவே ஹர ஹர மஹாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து என்று இரட்டை அர்த்தமுள்ள படங்களை இயக்கியவர். ஒருபுறம் நல்ல வசூலை கொடுத்தாலும், பலரையும் முகத்தை சுழிக்க வைத்தவர். ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், சதீஷ், சம்பத், கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

ஹீரோவின் மறதி :
இந்த படத்தில் ஹீரோவான ஆர்யா எல்லாவற்றையும் வேகமாக மறப்பதோடு, உடனுக்குடன் தான் நினைப்பதை செய்வதிலிருந்து மறந்து விலகும் தன்மை கொண்டவராக உள்ளார். 

எல்லா படத்திலும் வரும் சாக்லெட் பாயாக ஆர்யா இந்த படத்திலும் வந்துள்ளார். என்ன தான் காமெடி, நடிப்புன்னு வெளிப்படுத்தினாலும் முந்தைய படங்களை பிரதிபலிப்பதாகவே உள்ளது. 

ஹீரோயின்; 
அழகா இருந்தாலும் கொஞ்சம் கூட சுயபுத்தி இல்லையா என்று கேட்கும் அளவிற்கு ஆர்யா என்ன சொன்னாலும் நம்பி விடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹீரோயின் சாயிஷா சைகல். 

பலவீனம் : 
இந்த படத்தின் ஹீரோ ஆர்யா வேளாண் விஞ்ஞானியாக வருகிறார். விஞ்ஞானிக்கும் மறதிக்கும் அப்படியே எதிர்பதமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் செல்ல நினைக்கும் பாதையை மறந்து போகும் அளவுக்கு மறதி உடையவராக உள்ளார். 
சாதாரண பார்வையாளர் கூகுள் மேப் பயன்படுத்த வேண்டியது தானே என கேட்குமளவிற்கு புத்தி இல்லாத விஞ்ஞானியாக நடித்திருக்கிறார். 

இசை : 
படத்தில் 4-5 பாடல்கள் வருதே தவிர படத்தை பார்த்து வெளியே வந்தவுடன் நாமும் மறந்து விடும் அளவிற்கு இசையும், பாடலும் உள்ளன. 

பலம் : 
என்ன தான் ஆர்யாவின் பழைய படங்களை போலவே இருந்தாலும், நல்ல ஜாலியாக கதையை நகர்த்தி செல்கிறார். இது அவரின் மறுபிரவேசம் என்றே சொல்லலாம். Depth Analysis
Overall Average Rating
கால அளவு 2.5/5

கதை 2.5/5