1 லட்சம் பேர் இறங்குகிறார்கள்.. திமுகவில் வெடித்த திடீர் பிரளயம்: அழகிரி அரங்கேற்றும் அதிரடி நடவடிக்கை..!

Share:
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். இந்நிலையில் திமுகவின் அவசரக் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெற்றது. 

நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மேடையிலும், மற்ற நிர்வாகிகள் அவரவர் இருக்கையிலும் அமர்ந்து இருந்தனர்.

கடந்த 50 வருடங்களாக திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், மாநில சுயாட்சி மாநாடு நடத்துவது குறித்தும், கலைஞருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், கலந்து ஆலோசிப்பதற்காக இன்று செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

இந்நிலையில் திமுகவின் பொதுக்குழு வருகின்ற ஆகஸ்ட் 28 ஆம் தேதி பொதுக்குழு கூடும் என பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள மு.க.அழகிரி, "செப்டம்பர் 5 - ம் தேதி கருணாநிதி நினைவிடத்தை நோக்கி பேரணி நடைபெறுகிறது.

அதில் 75 ஆயிரம் பேரிலிருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பர். என் பின்னால் பாஜக உள்ளிட்ட யாரும் இல்லை.

கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர். அதை செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் பேரணியில் நிரூபித்துக்காட்டுவேன். அதற்கு பிறகும் எதிர்காலத்தில் என் பலத்தை நிரூபித்துக்காட்டுவேன்” என்று கூறியுள்ளார்.