ஸ்டாலினா? அழகிரியா? மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவு!

Share:
திமுகவின் அடுத்த தலைமை யார் என்ற தலைப்பில் தமிழ் சமயத்தின் கருத்துக்கணிப்பு முடிவு இதோ

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவசர செயற்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. திமுக கட்சி விதிமுறைகளின் படி, அக்கட்சியின் தலைவர் பதவி காலியானால், உடனே அப்பதவியை நிரப்பப்பட வேண்டும். இதனால், நாளை நடைபெறும் அவசர செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி, தமிழகத்தில் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள், என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அழகிரியின் இந்த பேச்சு திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திமுக.,வின் அடுத்த தலைமை யார் என்ற தலைப்பில் தமிழ் சமயம், ஃபேஸ்புக் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில், மு.க. ஸ்டாலினுக்கு 51.8% மக்கள் வாக்களித்துள்ளனர். மு.க. அழகிரிக்கு 30.6% பேர் வாக்களித்துள்ளனர். 17.6% பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை. முடிவாக மு.க ஸ்டாலினே திமுக கட்சியை வழிநடத்த மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.