சமூக ஊடக எல்லா தடையும் நீங்கியது, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அதிரடி அறிவிப்பு!

Share:
சமூக ஊடகங்களில் இந்தியர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைப்போலவே சமீபகாலமாக தவறான செய்திகள், வன்முறையை தூண்டும் கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன. இந்த மாதிரியான பதிவுகளால் பல மோதல்களும், ஜாதி மற்றும் மத மோதல்கள் பெருகி வருவதாக சமீபகால குற்றங்கள் உணர்த்துகின்றன. மேலும் இளைஞர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் காணொலிகளும் பதிவிடப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தகவல் தொடர்புதுறை அமைச்சகம் அதிரடியான முடிவை அறிவித்தது.
 .

நெட்டிசன்களே இனி கொண்டாட்டமே


அதன்படி, சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புவோரைத் தண்டிப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக நாட்டில் உள்ள 716 மாவட்டங்களிலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை கண்காணிக்க சமூக ஊடக பிரிவு ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கணினி துறையில், சமூக வலைத்தளங்களில் சிறந்த நிபுணர்களை வைத்து சமூக வலைதளங்களை கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டது.

மேலும் இந்தத் திட்டத்தை தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பொறியியல் பிரிவான பிஇசிஐஎல் செயல்படுத்த உள்ளதாகவும் இந்த அமைப்பு அனைத்து வகையான சமூக ஊடகங்கள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து டேட்டாக்களை சேகரிப்பதுடன், செய்தித்தாள்கள், உள்ளூர் சேனல்கள், வானொலி உட்பட அனைத்தையும் கண்காணிக்கும் தகவல்கள் வெளியானது.

இவ்வாறு கண்காணித்து தினமும் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை கண்காணிக்க தகுந்த வல்லுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. 
இந்நிலையில் இந்த முடிவுக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இப்போது இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் சமூக வலைதலங்களை கவனிக்கும் மத்திய அரசின் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கருத்து சுதந்திரம் காக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளார்கள். .