கர்நாடக அணைகளில் மீண்டும் நீர்திறப்பு அதிகரிப்பு

Share:
கர்நாடகாவில் மழை குறைந்ததால் கடந்த 2 நாட்களாக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகள், மேட்டூர் அணை, காவிரி ஆறு, கபினி அணை, கேஆர்எஸ் அணை, பிலிகுண்டுலு,  மேட்டூர் அணை நீர்மட்டம் , 
Karnataka Dams, Mettur Dam, Cauvery River, Kabini Dam, KRS Dam, Biligundula, Mettur Dam Water Level,
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 32,660 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து 11,458 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 21,202 கனஅடியும் திறக்கப்படுகிறது. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 24,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் 17,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கனஅடியில் இருந்து 20,742 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நீர்வரத்து, இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 20,800 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 ஆகவும். நீர்இருப்பு 93.47 டிஎம்சி.,யாகவும் உள்ளது.