என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் இருந்து நேரலையில் விஜயகாந்த் கதறும் வீடியோ..!

Share:

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.
 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் " கலைஞர் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக என்கிற கட்சியை அவர் கட்டுப்பாடாக வைத்திருந்தார். நான் அமெரிக்கா வந்திருந்தாலும் என் நினைவுகள், எண்ணம் அனைத்தும் கருணாநிதியின் மேலேயே இருக்கிறது.
என்னை விஜி விஜி என பாசமாக அழைப்பார். அவரின் மறைவை என்னால் தாங்க முடியவில்லை" எனக் கூறி அதற்கு மேல் பேச முடியாமல் விம்மிய அவர் கதறி அழுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.