நிறைவேறிய கடைசி ஆசை,துக்கத்திலும் உற்சாகம் அடைந்த தொண்டர்கள்.!

Share:
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறுநீரக தொற்று மற்றும் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் நலிவடைந்து கடந்த 11 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காவேரி மருத்துவமனை நிர்வாகம் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிக்கை விடுத்தது. 

இந்த செய்தி கேட்டு காவேரி மருத்துவமனை முன் குவிந்திருந்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது புலம்புகின்றனர்.
அவரின் கடைசி ஆசையான மெரினாவில் அண்ணாவின் பக்கத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.அதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

மேலும் தொண்டர்கள் அனைவரும் தலைவருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோஷமிட்டனர்.மேலும் பல தரப்பினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர் .

இந்நிலையில் பல நீதிபதிகள் தீர்ப்பை படித்து கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வழங்க சட்ட சிக்கல் எதுவும் இல்லை என சில நிமிடங்களுக்கு முன்பு கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனால் தொண்டர்கள் வெற்றி கிடைத்தது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.