பாஜக அரசுக்கு எதிரான மாநாட்டை கைவிட்ட திமுக! அமித் ஷாவை அழைக்கும் முக ஸ்டாலின்!

Share:
திமுக சார்பில் சென்னையில் மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில் வருகிற ஆகஸ்ட் 30ம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரமாண்ட மாநாடு நடத்தப்பட இருந்தது. தற்போது கலைஞரின் மறைவினால் அந்த மாநாடு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலைஞர் புகழ் வணக்கம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக ஆளாத மாநிலங்களில், அரசின் செயல்பாடுகளில் ஆளுநரின் தலையீடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் மூத்த தலைவர்களான சரத்பவார், உமர் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக திமுகவின் தலைமை கழகம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைந்த காரணத்தால் இந்த மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவில்லை. ஆனால் அதற்கு பதிலாக கலைஞர் புகழ் வணக்கம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நாட்டின் பிற மாநில முன்னணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அதிமுகவை தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.