திடீர் அறிவிப்பு..! மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார்..!

Share:
மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் அமெரிக்கா செல்கிறார்..!கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். 73- வயதான கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது பற்றி முதலமைச்சரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள செய்தியில், "முதல் மந்திரி பினராயி விஜயன் அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக்கில் சிகிச்சை பெறவுள்ளார்" என தெரிவிக்கபட்டுள்ளது. 

மேலும் இந்த சிகிச்சைக்காக அவர் அடுத்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அவர் இந்த சிகிச்சைக்காக அமெரிக்க செல்வதற்கு தேவையான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டு விட்டதாக கேரளா மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.