சர்வதேச அளவில் சாதனை படைத்த ஜியோ! அதிரடியான விற்பனையில் ஜியோ!!

Share:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 41வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானி உள்பட பல்வேறு முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு புதிய திட்டங்கள் வெளியிட்டார்.

குறிப்பாக, ஜியோ போன்-2, ஜியோஜிகா செட்-டாப் பாக்ஸ், ஜியோஜிகாபைபர் என பல்வேறு புதிய சேவையை இன்று அறிமுகப்படுத்தியது.

அப்போது பேசிய முகேஷ் அம்பானி கூறியதாவது:-


இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி செலுத்தும் நிறுவனம் ரிலையன்ஸ். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22 மாதத்துக்குள்ளேயே 21.5 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை எட்டியதில்லை. ஜியோ இந்தியாவின் மொபைல் வீடியோ நெட்வொர்க்காக செயல்படுகிறது. இவ்வாறு முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.