இறந்த பின்பும் கலைஞரின் குரலுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் கௌரவம்! பெருமைப்பட வேண்டிய நிகழ்வு

Share:
திமுகவின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 7ஆம் தேதி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பல இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதுபோல தான் நடிகர், நடிகைகள் சார்பாக மறக்க முடியுமா கலைஞரை... என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நேற்று மாலை நடைப்பெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கலைஞரின் குரலை பற்றி பிரபல மிமிக்ரி ஆர்டிஸ்ட்டும் நடிகருமான மயில்சாமி பேசினார்.
Image result for கலைஞர் கருணாநிதி
அப்போது இந்த குரலை கற்றுகொள்ள அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை கூறினார். கல்லூரி படித்த போது ஒருவர் பேசிய கலைஞர் குரலுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் தானும் அந்த குரலை கற்றுகொள்ள வேண்டும் என முயற்சி செய்துள்ளார்.

எல்லா குரலையும் அசால்ட்டாக மிமிக்ரி செய்யும் அவர், கலைஞரின் குரலை கற்க ஒரு நாள் இரண்டு நாள் இல்லை மொத்தம் 10 நாட்களுக்கு மேலாகியுள்ளது. பிறகு அந்த குரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அன்பான உடன்பிறப்புகளே என்ற வரியை விட்டுவிட்டாராம். இதனால் அந்த கூட்டமே போர்களமானதாம்.

பிறகு என்ன அந்த வரியை சேர்த்து மறுபடியும் பேசிய பின்னர் தான் எல்லாரும் அமைதியானார்களாம்.