கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை?..! வெளியான பரபரப்பு தகவலால் சர்ச்சை .!

Share:
திமுக தலைவர் #கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த சில நாட்களாக தி.மு.க. தலைவர், #கலைஞர்கருணாநிதி க்கு உடல் நலம்( நோய் தோற்று) பாதிக்கப்பட்டதால், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 9 நாட்களாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


காவேரி மருத்துவமனையில், 24 மணி நேரமும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதையடுத்து, காவேரி மருத்துவமனை முன் #திமுக தொண்டர்கள் குவிந்தனர். அந்த பகுதி முழுவதும், பதற்றமான சூழ்நிலை உருவாகியது. இதைதொடர்ந்து காவல்துறை பாதுகாப்பை அதிகரித்தது. 


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு தலைவர்கள் , திரை பிரபலம் என அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இதுவரை ராகுல் காந்தி, துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தலைவர்களை, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து செல்கின்றனர். இதைதொடர்ந்த்து இன்று, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் திமுக தலைவர் கருணாநிதியை நலம் குறித்து கேட்டறிந்தார்.

வெளிநாட்டு மருத்துவர்கள் தலைமையிலான குழு கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது. இந்த மருத்துவ குழுவை முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஏற்பாடு செய்துள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், #திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்களும்,மருத்துவ வட்டாரங்களும் தெரிவிப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கருணாநிதிக்கு தீவிர சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை மருத்துவமனையில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.