இனிமேல் இதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம்!. அறிவித்தது தமிழக அரசு!.

Share:
இனிமேல் இதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம்!. அறிவித்தது தமிழக அரசு!. கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்ப்பவர்கள் எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்கள், மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதை தவிர வீடியோ பார்த்தோ, திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்த்து கொண்டால் தாய் சேய் திட்டத்தில் ரூ. 12 ,000 பணமும் குழந்தைகளுக்கு தேவையான ஆடை, முகத்திற்கு போடும் பவுடர், சோப்பு, மெத்தை, கொசுவலை, விளையாட்டுப்பொருட்கள் போன்ற பொருட்களையும் இலவசமாக அளிக்கின்றது. எனவே பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. 
மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்து கொள்வது மட்டுமே தாய் மற்றும் குழந்தையின் நலனுக்கு பாதுகாப்பானது என்றும். கணவனையும், குடும்பத்தாரையுமே சார்ந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ சேவை தேவைப்படும் போது மூட பழக்கவழக்கங்களாலோ அல்லது அறியாமையினாலோ மருத்துவ சேவை கிடைக்காமல் தடுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இது போன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் உடனடியாக 102, 104 மற்றும் பொது சுகாதாரத்துறை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், மேலும் புகார்களுக்கு 044-24350496, 24334811, 9444340496 ஆகிய எண்களை தொடர்புக் கொள்ளலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.