நீங்கள் ஆளவேண்டும்.. இல்லையென்றால் ... திடீரென்று அன்புமணிக்கு குவியும் ஆதரவு..!

Share:
கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகளவு உபரி வெள்ளநீர் நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது.

வெள்ளத்தில் மூழ்கும் ஊர்கள், ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. கொள்ளிடத்தில் தமிழகத்தின் நீர்வளம் வீணடிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு, நீர் மேலாண்மையின் தேவை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.
கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் லட்சக்கணக்கான கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது. ஒருபக்கம் வெள்ளம். மறுபக்கம் கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை பகுதிகளில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லவில்லை.

இந்த 5 வாரங்களில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 242 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது. இதில் 93 டி.எம்.சி மேட்டூர் அணையில் தேக்கி வைத்துள்ளனர். மேட்டூரிலிருந்து கிட்டதட்ட 149டி.எம்.சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையிலிருந்து 15 டி.எம்.சி காவிரியில் கலந்திருக்கிறது. அமராவதியிலிருந்து 6டி.எம்.சி தண்ணீர் காவிரியில் கலந்திருக்கிறது. கிட்டத்தட்ட 170டி.எம்.சி காவிரியில் வந்துள்ளது.இதில் 60 டி.எம்.சி மட்டுமே விவசாயத்திற்கு ஆங்காங்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

தண்ணீருக்காக கர்நாடகா மாநிலத்தில் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வளவு டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

கடலூர், சிதம்பரம் வரும் வரை எந்த வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை. கொள்ளிடம் பகுதியிலும் எந்த வாய்க்காலிலும் தண்ணீர் சரியாக செல்லவில்லை. ஆனால் 2 லட்சம் கன அடி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இது மிகப்பெரிய மோசடி.

இதற்கு முதல் காரணம் அ.தி.மு.க. வினர்கள் வாய்க்கால்களை தூர் வாருவது , கரை கட்டுவது ஆகிய கான்ட்ராக்ட் பணி செய்து வருகின்றனர். இதனால் காண்ட்ராக்டில் பணம் சம்பாதிக்க சட்ரஸ் போட்டு வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாமல் தடை செய்துள்ளனர்.

வீராணம் ஏரியிலிருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் செல்லாமல் வாய்க்காலில் தடைபோட்டுள்ளனர். 2- வது காரணம் கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதி முப்போகம் விளைந்த பூமி. இங்கு விவசாயம் செய்தால் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க முடியாது மக்கள் போராடுவார்கள் என்ற காரணம்.

அதேபோல் 3-வது காரணம் ஓ.என்.ஜி.சி ஆங்காங்கே ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். தண்ணீர் விட்டால் ஓஎன்ஜிசிக்கும் பாதிப்பு ஏற்படும்.

நீர்மேலாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தரவேண்டும். கால நிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மாறி,மாறி வரும். இது மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் வரும். அதற்கு முன் எச்சரிக்கையாக அரசு செயல்படவேண்டும்' எ ன்று பேசியிருந்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த பலர், எங்களை மன்னித்து விடுங்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களே, நாங்கள் உங்களை சிலரின் பேச்சை கேட்டு நீங்களும் சாதி வெறியன் என்றெல்லாம் நினைத்தோம்.

ஆனால் இப்போது தான் புரிகிறது நீங்கள் தமிழ் சாதி மக்கள் மீது வெறியன் என்று, உங்கள் பேச்சு மற்றும் திட்டங்களை பார்க்கும் பொழுது நீங்கள் ஆளவேண்டும். இல்லை என்றால் உங்கள் திட்டங்களை ஆளுகின்றவர்களால் செயல் படுத்த வேண்டும் என்று எனது ஆசை , இதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்' என்று' என்று பதிவிட்டு வருகின்றனர்.